×

யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் மக்கள் மத்தியில் திமுக கூட்டணிக்குதான் வரவேற்பு உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் வைகோ பேட்டி

 

 

சென்னை: யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் மக்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு தான் வரவேற்பு உள்ளது என்று வைகோ கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து பேசினார். அப்போது வைகோ ஜனவரி 2ல் தொடங்கவிருக்கும் மது ஒழிப்பு நடைபயணத்திற்கான அழைப்பிதழை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த நடைபயணத்தை தொடங்கி வைக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அப்போது அமைச்சர் எ.வ.வேலு உடன் இருந்தார்.

தொடர்ந்து வைகோ அளித்த பேட்டி: மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எச்சரிக்கை செய்கின்ற விதத்தில் சமத்துவ நடை பயணம் வருகின்ற ஜனவரி 2ம் தேதி மேற்கொள்ள உள்ளேன். 950 பேர் இந்த நடைபயணத்தில் பங்கேற்கின்றனர். பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் இடம்பெறுகிறார்கள். திருச்சி உழவர் சந்தையில் மது ஒழிப்பு நடை பயணத்தை ஜனவரி 2ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்நடைபயனத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், கமலஹாசன் பங்கேற்க உள்ளனர். ஜனவரி 12ம் தேதி மதுரையில் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் நிறைவு நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமையும். யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் மக்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு இருப்பதை மக்கள் மத்தியில் பார்க்கிறேன். திமுக கூட்டணி வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம் என்றார்.

Tags : Dima alliance ,Chief Minister ,Mu. K. Vigo ,Stalin ,Chennai ,Wiko ,Dimuka alliance ,Anna Adhiwalayam ,President of ,Tamil ,Nadu ,First Minister of Tamil Nadu ,Mu. K. Secretary General ,
× RELATED திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 29ம்...