×

தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்

 

சென்னை: எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என ஒரு கோடி பேர் நீக்கப்படுகின்றனர். கடந்த அக்டோபர் மாத கணக்கின்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், 1 கோடி பேர் நீக்கப்படும் அபாயம்; சென்னையில் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது. சென்னையில் மொத்தமாக 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 15 லட்சம் பேர் நீக்கப்பட உள்ளனர். சென்னையில் 15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருப்பூர், கோவை, காஞ்சிபுரத்தில் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,S. I. ,R Missions ,
× RELATED எதுவும் தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை: அமைச்சர் ஆர்.காந்தி தாக்கு