புதுச்சேரி: எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டார். புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 85531 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 10.04 சதவீதம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தால் ஜன.15 வரை உரிமை கோரலாம். தகுதி இருந்தால் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
