×

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்திப்பு!!

சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர். அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சற்று நேரத்திற்கு முன்பாக வருகை தந்திருந்தார். அப்பொழுது அவரை சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு அழைப்பிதழை வழங்கினார். அதிலும் குறிப்பாக ஜனவரி 2ஆம் தேதி மதிமுக சார்பில் மது ஒழிப்பு நடைபயணம் தொடங்க இருக்கிறது.

அந்த மது ஒழிப்பு நடைபயணத்திற்கான அழைப்பிதழை வழங்கி, அந்த மது ஒழிப்பு நடைபயணத்தில் தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சரை மதிமுகவின் பொதுச் செயலாளர் அழைத்த்துள்ளார். அதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளையும், முக்கிய ஆலோசனைகளையும் மேற்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் எஸ்.ஐ.ஆர் பணி பாதிப்பு குறித்தும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுப்பது தொடர்பாகவும், ஆலோசிக்கப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பின்போது சிபிஎம்னு என்னும் எம்எல் ராஜாராம் சிங் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து சமூக நீதி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இருவரும் முதலமைச்சரை சந்தித்து ஒவ்வொருவராக புறப்படுகிறார்கள்.

Tags : MDMK ,General Secretary ,Vaiko ,Marxist Shanmugam ,Chief Minister ,MK Stalin ,Chennai ,General ,Marxist ,Shanmugam ,Tamil Nadu ,DMK ,President ,Anna Arivalayam ,
× RELATED ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் காஸ் கசிவு: கிராம மக்கள் பீதி