- அண்ணாம்-கொடுக்கும் பிரைமேட்ஸ்
- சென்னை
- அண்ணம் தரும் அமப்பகராணன்
- கைத்தொழில் அமைச்சர்
- ஸ்ரீ.
- டி. ஆர். பி. ராஜா
- கொளத்தூர்
- முதலமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே
- ஸ்டாலின்
சென்னை: அன்னம் தரும் அமுதக்கரங்கள்” வெற்றிகரமாக தொடர்ந்து 300வது நாளான இன்று சிறப்பு அழைப்பாளராக தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்கள் கலந்துகொண்டு கொளத்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனிதநேய விழாவாக சென்னை கிழக்கு மாவட்டம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கழகத் தலைவரின் 72வது பிறந்த நாளையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களின் ஏற்பாட்டில் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” மாபெரும் உன்னதமான திட்டமானது 2025 பிப்ரவரி 20ஆம் தேதி முதல், 2026 பிப்ரவரி 19ஆம் தேதி வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 நபர்களுக்கு மேல், வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சிறப்புமிகு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 20.2.2025 அன்று கொளத்தூரில் அண்ணியார் துர்கா ஸ்டாலின் அவர்களுடைய திருக்கரங்களால் தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள். அந்த வகையில் 24ஆம் நாள் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களும், 30வது நாள் உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் கோவி. செழியன் அவர்களும், 50வது நாள் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களும், 75வது நாள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களும், 100வது நாள் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களும், 125வது நாள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களும்,
150வது நாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் அவர்களும், 175வது நாள் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களும், 200வது நாள் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்களும், 225வது நாள் சட்டம் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களும், 250வது நாள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களும், 275வது நாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களும் கலந்து கொண்டு காலை உணவு வழங்கி சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியானது வெற்றிகரமாக தொடர்ந்து 300வது நாளான இன்று (16.12.2025), கொளத்தூர், 65-வது வார்டு, கிழக்குத் தெரு மைதானம் சந்திப்பு மற்றும் 65அ-வது வார்டு, ஜெயராம் நகர் ஆகிய 2 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள்” கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கி சிறப்பித்தார்.
இச்சிறப்புமிக்க “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” திட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தினந்தோறும் 275 நாட்களுக்கும் மேல் 550-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 7.00 மணியளவில் கலந்து கொண்டு பசியாக வரும் பொது மக்களுக்கு, பசியாற காலை உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார். இச்சிறப்புமிக்க திட்டமானது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று, அப்பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு காலை உணவு அருந்திவிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வாழ்த்தி வருகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழக முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களால் ஆண்டுதோறும் முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழா மனிதநேய விழாவாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு வட்டார வாரியாக, “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” என்ற தலைப்பில் ஒரு நாளைக்கு சுமார் 1200 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணியார் அவர்களால் இத்திட்டம் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி துவங்கப்பட்டு, இன்றைக்கு 300-வது நாளாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அடுத்து வரும் 65 நாட்களிலும், மீண்டும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் வரை, இத்திட்டம் சென்னை கிழக்கு மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு நாளைக்கு சுமார் 1200 நபர்களுக்கு இந்தக் காலை உணவு வழங்கப்படுகிறது.
இந்தக் காலை உணவு இட்லி, தோசை மட்டும் அல்லாமல், பொங்கல், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து வகையான உணவுகளும், அதனுடன் தேவையான வடகறி, சட்னி, சாம்பார் மற்றும் ஒரு பாதாம் பால் என பல்வேறு வகையான சுவையான காலை உணவு அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு 25-வது நாட்களிலும் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு, அமைச்சர் பெருமக்களும் இத்திட்டத்தில் வந்து பங்கு பெற்றிருக்கின்றார்கள். இன்றைக்கு 300-வது நாளாக, சகோதரர் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள்” பங்கேற்று, இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள். இந்த வகையில், அடுத்த 25-வது நாள், அடுத்த சிறப்புமிக்க அமைச்சர் அவர்கள் வந்து பங்கேற்பார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுமட்டுமல்லாமல், வரக்கூடிய 18-ஆம் தேதி, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக சுமார் 25 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் பகுதியில், ஜி.கே.எம். காலனியில் இருக்கக்கூடிய இடத்தில், சென்னை மாநகராட்சியிலேயே இதுவரை இல்லாத வகையில் திருமண மண்டபம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
முதலமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் இந்தத் திருமண மண்டபம் வரக்கூடிய 18-ஆம் தேதி பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை என்ற பெயரில் திறந்து வைக்கப்பட இருக்கின்றது. இதில் 15 ஜோடிகளுக்கு திருமணமும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் நடைபெற இருக்கின்றது. இந்த விழாவும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
* மெரினாவில் ஆதரவில்லாதவர்களுக்கு தங்கும் விடுதி கட்டடம் எப்போது பயன்படுத்தப்படும்?
துணை முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதன் அடிப்படையில் அவருடைய தொகுதிக்குட்பட்டு, நிறைய பேருக்குத் தேவையான வகையில் கட்டிடம் கட்டப்பட்டிருக்கின்றது. சென்னை மாநகராட்சியின் சார்பாக விரைவில் முதலமைச்சர் அவர்களாலும், துணை முதலமைச்சர் அவர்களாலும் திறந்து வைக்கப்பட இருக்கின்றது.
* மற்ற இடங்களில் இதுபோன்று துவங்கப்படுமா?
முதல் நடவடிக்கையாக ஒரு சோதனை அடிப்படையில் இதைச் செய்திருக்கின்றோம். இது பொதுமக்களிடம் எவ்வாறு வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் பொறுத்து, தேவைப்பட்டால் இவை மற்ற பகுதிகளிலும் துவங்கப்படும்.
செல்லப் பிராணிகளின் தடுப்பூசிக் காலக்கெடு முடிந்துள்ள நிலையில், அவை வீடுகளில் சென்று எப்பொழுது கணக்கிடப்படும்?
நாய்களைப் பொறுத்தமட்டில், சென்னை மாநகராட்சிக்குட்பட்டு, தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய சூழல் இருந்து வருகிறது. அந்த வகையில் மாநகராட்சியின் சார்பாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதனுடன், மைக்ரோ சிப்களும் பொருத்தப்பட்டு, அந்த நாய்களுக்கு எந்த அளவு தடுப்பூசி போடப்பட்டிருக்கின்றது, ரேபிஸ் தொற்றுநோய் பாதிப்பு உண்டாகியிருக்கிறதா என்று கண்டறியப்பட்டு, செல்லப் பிராணிகளுக்கும் போடப்பட்டு வருகிறது.
சாலையில் உள்ள தெரு நாய்களுக்கும் போடப்பட்டு வருகிறது. அந்தக் கால அவகாசம் இன்னும் கூடுதலாக இரண்டு வாரங்கள் நீட்டிப்பு செய்து நாம் செய்திருந்தோம். இன்றிலிருந்து வரக்கூடிய நாட்களில், வீடு வீடாகச் சென்று பதிவு செய்யாதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும். இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி.ஆர்.பிரியா அவர்கள் தெரிவித்தார்.
