டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றுவதால் என்ன பலன்? என டிஆர்.பாலு எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டில் |கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் பெற்றனர். மகாத்மா காந்தி மீது வெறுப்பின் காரணமாக வேறு பெயரில் ஒன்றிய பாஜக அரசு புதிய மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. நாட்டின் தேசப்பிதாவான மகாத்மா காந்தியை கேலிக்கு உள்ளாக்கிவிட்டது ஒன்றிய பாஜக அரசு.
