டெல்லி: 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 16,31,762 பேர் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் கம்லேஷ் பஸ்வான் தகவல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தில் அக்.10ம் தேதி, முதல் நவ. 14ம் தேதி வரை 16,31,762 பேர் நீக்கம். தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் 33,090 பேர் நீக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
