ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ரூ.30 கோடி மோசடி செய்த வழக்கில் தயாரிப்பாளர் விக்ரம் பட், அவரது மனைவிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் விக்ரம் பட், அவரது மனைவியை நீதிமன்ற காவலில் உதய்பூர் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. மருத்துவரிடம் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் விக்ரம் பட், அவரது மனைவி ஸ்வேதாம்பரி நீதிமன்றத்தில் ஆஜரானார். மருத்துவ சிகிச்சை பெற வேண்டியுள்ளதால் இடைக்கால ஜாமின் கோரி விக்ரம் பட், அவரது மனைவி மனு அளித்துள்ளார்.
