டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை புகாரை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கு தனி நபரின் புகார் அடிப்படையிலானது, போலீஸ் எஃப்ஐஆரின் அடிப்படையிலானது அல்ல; இந்நிலையில் சோனியா, ராகுலுக்கு எதிரான ED புகாரின் நம்பகத்தன்மையை தீர்மானிப்பது முறையல்ல. அமலாக்கத்துறை புகாரை ஏற்க முடியாது என டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டது.
