- வேதாரண்யேஸ்வரர் கோயில்
- சோமவரம்
- வேதாரண்யம்
- வேதராண்யேஸ்வரர்
- சுவாமி கோயில்
- சிவன்
- அகஸ்திய
- வேதங்கள்
- கருவி
- சம்பந்தர்…
வேதாரண்யம், டிச.16: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு உடையது. அகஸ்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தந்த இடம். வேதங்கள் பூஜை செய்து மூடி கிடந்த திருக் கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரப் பதிகங்கள் பாடி கதவைத் திறந்ததாக வரலாற்று சிறப்புமிக்க கோயில். இந்த கோவியிலில் கார்த்திகை கடைசி சோம வாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.
புனித நீர் அடங்கிய குடங்கள், 1008 சங்குகளும் வைத்து சிறப்பு பூஜை யாகம் நடத்தப்பட்டது. பின்பு புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
