- வழக்கறிஞர்கள் சங்கம்
- தேனி கோர்ட்
- பிறகு நான்
- தேனி வழக்கறிஞர்கள் சங்கம்
- தேனி மாவட்ட நீதிமன்றங்கள்
- மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள்
- லட்சுமிபுரம்
தேனி, டிச. 16: தேனி மாவட்ட நீதிமன்றங்கள் முன்பாக தேனி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று தேனி அருகே லட்சுமிபுரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, கட்டாய இ-பைலிங் முறையை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கு உடனடியாக பாதுகாப்புச் சட்டம் இயற்ற கோரியும், வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், சங்க துணைத் தலைவர்கள் பாலமுருகன், கணேஷ் இணைச் செயலாளர்கள் தமிழ்மணி, லோகநாதன், துணைச் செயலாளர்கள் வித்யா, கமல்ராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
