×

திருவொற்றியூரில் போதைப்பொருளுடன் 3 பேர் பிடிபட்டனர்

திருவொற்றியூர்: திருவொற்றியூரை அடுத்த விம்கோ நகர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை ஒடிசாவில் இருந்து சென்னை நோக்கி வந்த பயணிகள் விரைவு ரயில் சிக்னலுக்காக நின்றிருந்தபோது அந்த ரயிலில் இருந்து இறங்கிய கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜீவன் (21) என்ற வாலிபரை ரயில்வே போலீசார் சோதனையிட்ட போது அவர் வைத்திருந்த பையில் 1.2 கிலோ கஞ்சா இருப்பதை கண்டுபித்து அவரை எண்ணுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த அதே பகுதியை சேர்ந்த பிரதீப் (28), சூர்யா (30) ஆகிய இருவரை பிடித்து சோதனையிட்டதில் அவர்களிடம் 13 போதை மாத்திரைகள் இருப்பதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Thiruvotriyur ,Wimco Nagar ,Odisha ,Chennai ,Jeevan ,Thrissur, Kerala ,
× RELATED ஊத்தங்கரை அருகே நள்ளிரவில் வீடு...