×

கொல்லம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் கைது

திருவனந்தபுரம், டிச. 16: கேரள மாநிலம் கொல்லம் அருகே கடைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சசி (65). கடந்த சில தினங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டைச் சேர்ந்த 5 வயது சிறுமியை தன்னுடைய வீட்டுக்கு அருகே உள்ள ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். சிறுமி அழுததை தொடர்ந்து முதியவர் சசி அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து சிறுமி தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த தாய், சம்பவம் குறித்து கடைக்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து சசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Kollam ,Thiruvananthapuram ,Sasi ,Kadayakkal ,Kerala ,
× RELATED அதீத பனி மூட்டத்தின்போது பாதுகாப்பான விமான சேவை அளிப்பது எப்படி?