×

கோணம் அறிவுசார் மையத்தில் ரூ.66 லட்சம் செலவில் புதிய கூடுதல் கட்டிடம் மேயர் மகேஷ் பணியை தொடங்கி வைத்தார்

நாகர்கோவில், டிச. 16: நாகர்கோவில் மாநகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட கோணம் அறிவுசார் மையம் மற்றும் நூலக கட்டிடத்தில் புதிய கூடுதல் கட்டிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.66 லட்சத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது. கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு பணி நேற்று நடந்தது. மாநகராட்சி மேயர் மகேஷ் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். உடன் மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, உதவி செயற்பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ராஜசீலி, சுகாதார அலுவலர் பகவதி பெருமாள், திமுக நிர்வாகிகள் பீட்டர், அகஸ்டஸ் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mayor ,Mahesh ,Konam Knowledge Center ,Nagercoil ,Nagercoil Corporation ,
× RELATED அதீத பனி மூட்டத்தின்போது பாதுகாப்பான விமான சேவை அளிப்பது எப்படி?