கன்னியாகுமரி, டிச.16: கன்னியாகுமரி அருகே கொட்டாரம் அச்சன்குளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (43). சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வருகிறார். தனது டெம்போவை அப்பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டு முன்பு நிறுத்துவது வழக்கம். சம்பவத்தன்று இரவு டெம்போவை வீட்டு முன்பு நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது டெம்போவை காணவில்லை. இரவில் மர்மநபர்கள் டெம்போவை திருடி சென்றது தெரியவந்தது. டெம்போவின் மதிப்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் என கூறப்பட்டது. இதுகுறித்து செந்தில்குமார் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ வினிஷ்பாபு வழக்குப்பதிவு செய்து திருட்டு போன டெம்போ குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
