×

சம்பா பயிருக்கு ஊட்டச்சத்து உரம் தெளிப்பு இரவோடு இரவாக ஏழையின் வீட்டிற்கு பாதை திருச்சி கலெக்டருக்கு மக்கள் புகழாரம்

திருச்சி, டிச.15: ஏழை விவசயாக்கூலி வீட்டிற்கு நள்ளிரவு எனவும் பாராமல் இரவோடு இரவாக பாதை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுத்ததுடன், 18 ஆண்டுகளாக மின் வசதி இல்லாத அந்த குடும்பத்தாருக்கு மின் இணைப்பும் பெற்றுத்தர நடவடிக்கை எடுத்து வரும் திருச்சி மாவட்ட கலெக்டரை அப்பகுதி மக்கள் மனமார பாராட்டி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் ரங்கம் பெருகமணியை சேர்ந்தவர் சத்தியா (45). இவரது கணவர் பெரியசாமி (48). விவசாய கூலி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சத்தியாவின் அண்ணன் சங்கர். சத்தியா வீட்டின் அருகே வசித்து வருகிறார். அண்ணன் தங்கை இருவரும் அருகிலுள்ள பொதுப்பாதையை காலம் காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர். சத்தியாவின் வீட்டில் கடந்த 18 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லை. பள்ளி செல்லும் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவதிப்பட்டு வந்த சத்தியாவுக்கு தங்கள் வீட்டிற்கு மின்சார வசதி வேண்டும் என்பது 18 ஆண்டு கால கனவாக இருந்தது. இந்நிலையில் தனக்கும் காலம் கனிந்து வரும் என காத்திருந்த சத்தியா, தன் வீட்டுக்கு மின்சார வசதி கோரி கடந்த 8.10.2025 அன்று அனைத்து ஆவணங்களுடன் மின்சார இணைப்பிற்கு விண்ணப்பித்தார். மின்சார வாரிய அதிகாரிகள் சத்தியாவின் ஆவணங்கள் மற்றும் கள ஆய்வு உள்ளிட்ட சம்பிராதாயங்களை முடித்துக்கொண்டு, அனைத்தும் சரியாக இருப்பதாக கூறி சென்றனர். சத்தியா மற்றும் அவரது குடும்பத்தார் நம் வீட்டிற்கும் மின்சார வசதி கிடைத்துவிடும் என ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் சத்தியாவிற்கு திடீரென கடந்த 2.12.25 அன்று திருப்பராய்த்துறை உதவி மின் பொறியாளரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் பாதைக்கான தடையின்மை சான்று சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை கண்ட சத்தியாவிற்கு என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து நின்றார். இதற்கு காரணம்.., சத்தியா மின் இணைப்புக்கு விண்ணப்பித்தது, அவர் அண்ணன் சங்கருக்கு தெரிய வந்ததும், உடனே இரு குடும்பமும் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை வேலி அமைத்து, கல்லுக்கால் ஊன்றி தடுத்துவிட்டார். இதனால் செய்வதறியாது திகைத்த சத்தியா டிச.12 அன்று இரவு கலெக்டர் சரவணனை தன் குடும்பத்துடன் சந்தித்து, அழுது, புலம்பி தன் இயலாமையை எடுத்துக் கூறினர். இதையடுத்து மாவட்ட கலெக்டர், வீட்டு மின்சார இணைப்பிற்கு விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டு, அதற்கென விதி வகுத்துள்ள நிலையில், மின் இணைப்பு வழங்க கால தாமதம் ஆனதற்கான காரணம் குறித்தும், திருப்பராய்த்துறை உதவி மின் பொறியாளர் மீது விசாரணைக்கும் உத்தரவிட்டார்.

மேலும் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு கலெக்டர் பிறப்பித்த உத்தரவு பறந்தது, உடனே தாசில்தார் பெட்டவாய்த்தலை போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியுடன் சென்று, அங்கு சங்கர் அமைத்திருந்த வேலிகளை உடன் அகற்றி பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்குள் செல்வதற்கு முதல் கட்டமாக வழிவகை செய்த பின்னரே அங்கிருந்து புறப்பட்டனர். அடுத்த கட்டமாக அவருக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் ஒரு ஏழை குடும்பத்திற்காக, நள்ளிரவில் உடனடியாக ஓடோடி வந்து நடவடிக்கை எடுத்தது, பெருகமணி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அனைவரையும் நெகிழச்செய்தது. இருவரையும் அப்பகுதி மக்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.

Tags : Trichy ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்