சென்னை: மும்பையில் இருந்து அரக்கோணத்திற்கு ரயில் மூலம் கடத்திவரப்பட்ட 2,600 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து ரயிலில் பல்வேறு பகுதிகளுக்கு போதை மாத்திரை கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலை அடுத்து பயணிகளிடம் நடத்திய சோதனையில் 3 பேர் மாத்திரை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
