×

எல்ஐசி பாலிசியில் எடுத்த ரூ. 40 லட்சம் பணத்திற்காக காதலன் மூலம் தங்கையை கொன்ற பெண்: குஜராத்தில் கொடூரம்

வதோதரா: ரூ.40 லட்சம் எல்ஐசி பணத்திற்காக காதலனை ஏவி தங்கையை கொன்ற சகோதரி கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் அங்கோடியா கிராமத்தை சேர்ந்த அஜிசா திவான் என்பவர் கொல்லப்பட்டார். விசாரணையில் அவரை சகோதரி பெரோசா திவான் என்பவர் தனது காதலன் ரமீஸ் ஷேக்கை ஏவி கொன்று இருப்பது தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட அஜிசாவுக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் கடந்த 6 மாதமாக தனது தந்தை வீட்டில் அஜிசா வசித்து வந்தார். அங்கு தனது கணவருடன் பெரோசாவும் தங்கியிருந்தார். பெரோசாவுக்கும், உணவு விநியோக ஊழியர் ரமீஸ் ஷேக் என்பவருக்கும் ரகசிய காதல் இருந்தது. இந்த நிலையில் பெரோசா, அஜிசாவின் பெயரில் 40 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்து, அதில் தன்னை நாமினியாக நியமித்து, நவம்பர் 28 அன்று முதல் பிரீமியத்தைச் செலுத்தினார்.

அந்த முழுப்பணத்தையும் பெறுவதற்கு ஆசைப்பட்டு அஜிசாவைக் கொல்வதற்காக தனது காதலன் ரமீஸ் ஷேக் ஏவி, அவருக்கு 7 லட்சம் ரூபாய் தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து ஷேக், அஜிதாவை தனது மோட்டார் சைக்கிளில் ஒதுக்குப்புறமான இடத்திற்கும் அழைத்துச் சென்று, அங்கு அவளது துப்பட்டாவால் அவளைக் கழுத்தை நெரித்துக் கொன்றது தெரிய வந்தது. போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Tags : Gujarat ,Vadodara ,LIC ,Aziza Diwan ,Angodia ,Vadodara district ,Feroza Diwan ,
× RELATED மெஸ்ஸி நிகழ்ச்சியில் களேபரம்...