×

காத்திருந்து… காத்திருந்து… ஜி.கே.வாசன் வெறுப்பு

ஈரோடு: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நெல்லையில் பள்ளி மாணவிகள் மது அருந்தியதாக வெளியான செய்தி வேதனை அளிக்கிறது. எனவே, பள்ளி, கல்லூரிகளில் நீதி போதனை தரக்கூடிய வகுப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

தேஜ கூட்டணிக்கு தவெக வருவதற்கு வாய்ப்புள்ளதா? என நிருபர்கள் கேட்டதற்கு, அரசியல் களத்தை பொறுத்தவரை ஒவ்வொரு கட்சியும், பெரிய கட்சிகளின் இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக எடுக்கும் வரை காத்திருப்பது நல்லது. எதற்கும் கால அவகாசம் இருக்கிறது. காலம் காலாவதி ஆகவில்லை. அப்படி உள்ள சூழலில், அவசரப்பட வேண்டிய நிலை இல்லை. காலம் கனிந்துக்கொண்டிருக்கிறது. நல்ல முடிவுகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம் என ஜி.கே.வாசன் பதில் அளித்தார்.

Tags : G.K. Vasan ,Erode ,Thamaga ,Nellai ,Teja… ,
× RELATED ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதனை