×

வீடு புகுந்து 7.5 பவுன் நகை, பணம் கொள்ளை

வேடசந்தூர், டிச. 13: வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சி தாசிரிபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (65). வேடசந்தூரில் இரும்பு பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள் நூறு நாள் வேலைக்குச் சென்று வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த 7.5 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து பழனியம்மாள் புகாரில் வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vedasandur ,Palanisamy ,Thasiripatti, Kuttam panchayat ,Palaniammal ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...