- விநியோகம்
- விளவங்கோடு அரசு பள்ளி
- மார்த்தாண்டம்
- விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி
- தலைமை ஆசிரியர்
- தங்க சுகுனா
- குழித்துறை…
மார்த்தாண்டம், டிச.13: விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 54 மாணவர்கள், 41 மாணவிகள் என மொத்தம் 96 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் தங்க சுகுணா முன்னிலை வகித்தார். குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசைதம்பி கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிகளை வழங்கினார். இதில் குழித்துறை நகராட்சி கவுன்சிலர்கள் விஜூ, ஆட்லின் கெனில், முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் தங்கமணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பிரதீப்குமார், வக்கீல் லாரன்ஸ் விபின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
