ராஜபாளையம், டிச.15: ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டைகள் திருத்தம் தொடர்பான சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. இதில் விருதுநகர் மாவட்ட வழங்கல் அலுவலர் அமர்நாத், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். இதில் 64 மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
மேலும் ஏற்கனவே விண்ணப்பம் செய்த தகுதி வாய்ந்த 44 நபர்களுக்கு புதிய அட்டைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தனிவட்டாட்சியர் ஆனந்தராஜ், வட்டாட்சியர் ராஜீவ்காந்தி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரவிகுமார், தனி வருவாய் ஆய்வாளர் செந்தில் குமரன் ஆகியோர் கலந்து கொண்டார்.
