×

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் 172 கணக்குகளில் ரூ. 43.84 கோடி உரிமை கோராத தொகை வழங்கல்

கரூர், டிச.15: வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் 172 சேமிப்பு கணக்கில் உரிமை கோராத வைப்புத் தொகை ரூ. 43.84 கோடி வழங்கப்பட்டுள்ளுதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்டம் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை தீர்வு முகாம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை தீர்வு முகாம் டிச.5ம் ேததிய ன்று நடைபெற்றது. இது இந்திய அரசின் நிதி சேவைகள் துறை அறிமுகப்படுத்திய “உங்கள் பணம் – உங்கள் உரிமை” திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.

இந்த முகாமில், பயனாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட சரியான ஆவணங்களை ஆய்வு செய்து, மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.17.28 லட்சம் மதிப்பிலான உரிமை கோரப்படாத வைப்புத் தொகைகள் கடந்த 5ம் தேதியன்று மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் அவர்களால் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு முகாம் கடந்த அக்.1ம் தேதி முதல் டிச. 31ம் தேதி வரை மூன்று மாதங்கள் நடைபெறுகிறது. வைப்புதாரர்கள் அல்லது இறந்த வைப்புதாரர்களின் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் அல்லது இறந்த வைப்புதாரர்களின் வாரிசுதாரர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தேவையான ஆதாரங்களை சமர்ப்பித்து, தங்களது உரிமை கோரப்படாத தொகைகளை வட்டியுடன் திரும்ப பெறலாம்.

கரூர் மாவட்டம் – உரிமை கோரப்படாத வைப்புத் தொகை நிலவரம்: மொத்த கணக்குகள்: 2,28,505,மொத்த தொகை:ரூ. 43.84 கோடி, இதுவரை தீர்வு செய்யப்பட்ட கணக்குகள்:172, இதுவரை வழங்கப்பட்ட தொகை:ரூ. 42.64 லட்சம் பொதுமக்கள் தங்களது வைப்புத் தொகை உரிமை கோரப்படாத நிலையில் உள்ளதா என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் www.udgam.rbi.org.in இணையதளத்தின் மூலம் அல்லது நேரடியாக வங்கிகள்,காப்பீட்டு நிறுவனங்களை அணுகி சரிபார்த்து பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கலந்துகொண்ட முக்கிய அலுவலர்களான விமல்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர், கரூர், டாக்டர் தர், உதவி பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி , பிச்சையா, மண்டல துணை மேலாளர், எஸ்பிஐ , பிரபாகரன், மாவட்ட வளர்ச்சி மேலாளர், நபார்டு, வசந்த்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் , லிமிசி, கோடக் மகேந்திரா ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது உரிமை கோரப்படாத வைப்புத் தொகைகளை தாமதிக்காமல் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தால் கேட்டு கொள்ளப்படுகிறது.

Tags : Karur ,Karur District Collector ,Tangvel ,Karur District ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...