×

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து..!

டெல்லி: நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் தமிழில் அவர் தெரிவித்திருப்பதாவது;

ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். ரஜினிகாந்த் தனது நடிப்பாற்றலால் பல தலைமுறைகளை கவர்ந்துள்ளார். ரஜினிகாந்தின் திரையுலக படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி தொடர்ச்சியான முத்திரை பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். நடிகர் ரஜினிகாந்த் நீண்டகாலம், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Rajinikanth ,PM Narendra Modi ,Delhi ,Narendra Modi ,
× RELATED ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி...