பள்ளி சென்ற பிளஸ் 2 மாணவி திடீர் மாயம்

காரிமங்கலம், டிச.12: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே திண்டல் ஊராட்சி தெள்ளனஅள்ளி பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். ஆனால், மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: