×

போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு பணிஆணை

சென்னை: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளுக்கான 342 இலவச பயிற்சி வகுப்புகளில் 17,220 போட்டி தேர்வர்கள் பங்குபெற்று 1,145 தேர்வர்கள் பல்வேறு அரசு மற்றும் பொது துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். மேலும், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் போட்டி தேர்வுகளுக்கான 55 இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு, 3,523 போட்டி தேர்வர்கள் பயன் அடைந்துள்ளனர். அதன்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-II போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பணிநியமன ஆணைகளை நேற்று வழங்கினார்.

Tags : Chennai ,District Employment and Career Guidance Centers ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு 12 – 14ம்...