×

ஊரக திறனாய்வு தேர்வுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்

திருப்பூர், ஜன.17: ஊரக திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் நாளை (18ம் தேதி) முதல் துவங்குகிறது. தமிழ்நாடு தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் 24ம் தேதி நடக்கிறது. இதற்கான பெயர் பட்டியல் தேர்வு மையம் வாரியாக, இணையதளத்தில் நாளை (18ம் தேதி) முதல் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். பதிவிறக்கம் செய்தவுடன் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் தேவர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதையும், அந்த மையத்திற்கு உட்பட்ட அனைத்து தேவர்களுக்கும் பெயர் பட்டியல் பெறப்பட்டு உள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். தேர்வர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டையும் www.dge.tn.gov.in இணையதளம் மூலம் நாளை( 18ஆம் தேதி) மதியம் முதல் பதிவிறக்கம் செய்யலாம். பெயர், பிறந்த தேதி ஆகியவற்றில் பிழையிருப்பின் திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சுழித்து, சரியான பதிவினை குறிப்பிட்டு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கையொப்பம் பெற வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

Tags : Rural Performance Exam ,
× RELATED ஹால் டிக்கெட்டில் தாய் என சன்னி லியோன் பெயர்!