புதுடெல்லி: நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் முடங்கியதால், பயணிகள் அவசரமாக மாற்று விமானங்களை நாடியதன் விளைவாக மற்ற விமான நிறுவனங்களின் டிக்கெட் தேவையும், கட்டணமும் தாறுமாறாக உயர்ந்தன. இதை தொடர்ந்து உள்நாட்டு விமான கட்டணங்களுக்கு தற்காலிக உச்சவரம்பு கட்டணத்தை ஒன்றிய அரசு நேற்றுமுன்தினம் அறிவித்தது.
இந்த நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இறுதியாக விழித்து கொண்டு எகனாமி வகுப்பு கட்டணங்களுக்கு வரம்பு நிர்ணயித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். விமான துறையில் பொது நலனை பாதுகாக்க போதுமான போட்டி இருக்கும் வரையில் எகனாமி கட்டணங்களுக்கு உச்சவரம்பு அமலில் இருக்க வேண்டும்.வலுவான போட்டி இல்லாத நிலையில் பொது நலனை பாதுகாப்பதற்கான ஒரே வழி விலை கட்டுப்பாடுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
