×

அனுமதியின்றி பட்டாசு பதுக்கியவர் கைது

 

சிவகாசி, டிச. 7: சிவகாசி நகர் கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேராபட்டி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடை அருகே தகர செட்டில் அனுமதியின்றி 9 அட்டை பெட்டிகளில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த மீனம்பட்டி ரத்தினபுரிநகரை சேர்ந்த ஜான் (50) என்பவரை கைது செய்தனர்.

Tags : Sivakasi ,Nagar East ,Perapatti ,
× RELATED ரேஷன் அட்டைகள் சிறப்பு குறைதீர் முகாம்