×

பாமக முன்னாள் நிர்வாகி குண்டாசில் கைது கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மோசடி

ேவலூர், ஜன.13:கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்த பாமக முன்னாள் நகர செயலாளர் குண்டாசில் கைது செய்யப்பட்டார்.
வேலூர் கொசப்பேட்டையில் லட்சுமணபெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(47), பாமக முன்னாள் நகர செயலாளர். இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க சீட் வாங்கித்தருவதாக கூறி வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் பல லட்சம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர், வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் வெங்கடேசனை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும் விசாரணையில், வெங்கடேசன் பலரிடம் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடி செய்தது தெரியவந்தது.இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு, எஸ்பி செல்வகுமார் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில், ெவங்கடேசன் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதற்கான நகல் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

Tags : Bamaga ,executive ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் பாமகவுக்கு சீட் கேள்விக்குறி