×

தமிழர்களை பிரிவினைவாதிகள் என கூறிய ஆளுநரை கண்டித்து தி.க ஆர்ப்பாட்டம்

 

பெரம்பலூர், டிச.5: தமிழர்களை பிரிவினைவாதிகள் என கூறிய தமிழக ஆளுநரை கண்டித்து தி.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் அம்மா உணவகம் அருகில் திராவிடர் கழகம் சார்பில் தமிழர்களை தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்று கூறிய தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில்பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக நகர செயலாளர் பிரபாகரன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் காவேரி நாடான் (எ) முத்துக்குமார், இந்திய தொழிலாளர் கட்சி மாநில தலைவர் ஈஸ்வரன் விசிக பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல், சிபிஐ மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ரமேஷ் மதிமுக தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களை அவதூறாக பேசிய தமிழக ஆளுநரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags : D.K ,Governor ,Perambalur ,D.K. ,Governor of ,Tamil ,Nadu ,Amma Canteen ,Dravidar Kazhagam ,
× RELATED சமுதாய திறன் பள்ளியில் வேலைவாய்ப்பு பயிற்சி