×

மாநகரில் ஒருசில பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

 

திருச்சி, டிச.2: திருச்சி மாநகராட்சியின் பராமரிப்பின் கீழ், கம்பரசம்பேட்டையில் இயங்கி வரும் தலைமை நீர்ப்பணி நிலையம், கலெக்டர் வெல்-டர்பைன் நீர்ப்பணி நிலையம் மற்றும் கலெக்டர் வெல் திருவெறும்பூர்-கே.எப்.டபிள்யூ ஆகிய மூன்று நீர்ப்பணி நிலையங்களிலில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யும் முக்கிய குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்புகள் இன்று (டிச.2) காலை குடிநீர் விநியோகம் செய்த பின்னர் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த நீர்ப்பணி நிலையங்களில் இருந்து குடிநீர் பெறப்படும் மரக்கடை, விறகுப்பேட்டை, சிந்தாமணி, ராக்போர்ட், திருவெறும்பூர், வள்ளுவர் நகர், பழைய எல்லக்குடி, புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர், கணேஷ் நகர் மற்றும் ஆலத்தூர் ஆகிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டிச.3 அன்று ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. மீண்டும் டிச.4ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.மேலும் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கன மாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Trichy ,Trichy Corporation ,Main Water Works Station ,Kambarasampettai ,Collector Well-Turbine Water Works Station ,Collector Well Thiruverumpur-KFW ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...