×

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், டிச.2: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றுவதை கண்டித்து, சேலம் அஸ்தம் பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் நகர வட்டக்கிளை செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்து பேசினார். இதில் தொழிலாளர் நல சட்டங்களை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 4 சட்ட தொகுப்புகளாக மாற்றும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் களுக்கான உரிமையை தொடர்ந்து நிலைநாட்டும் வகையில் தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக்கூடாது. 4 சட்ட தொகுப்புகளாக மாற்றி அமைக்கப்பட்டால், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். தொழிற்சங்க உரிமைகள் பாதிக்கப்படும். நீண்ட காலமாக தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகள் மறுக்கும் சூழல் உள்ளது. தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றி சட்ட தொகுப்புகளாக மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அர்த்தனாரி, செயலாளர் சுரேஷ், மாவட்ட இணை செயலாளர் திருநாவுக்கரசு, பதி, கந்தன், அருள்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu Civil Servants Association ,Salem ,Salem Astham Patti District Office ,SALEM CITY CIRCLES SECRETARY ,VENKADESAN ,
× RELATED விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது