×

கொடுங்கையூரில் கஞ்சா வியாபாரி கைது

 

பெரம்பூர், டிச. 1: கொடுங்கையூர் ஆர்ஆர் நகர் பகுதியில் இரவு நேரங்களில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் அவரது தனிப்படை போலீசார் கொடுங்கையூர் ஆர்ஆர் நகர் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் இரவு ஒருவரை கைது செய்தனர். அவரிடம் சோதனை செய்தபோது சிறுசிறு பெட்டலங்களாக கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கின்ற கருக்கா கார்த்திக் (24) என்பதும் சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது ஏழு குற்ற வழக்குகள் உள்ளதும் அடிக்கடி ஆந்திர பகுதிக்கு சென்று இவர் கஞ்சா வாங்கி வந்து, கொடுங்கையூர் பகுதியில் சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கருக்கா கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Tyranny Perampur ,Inspector ,Rajinikanth ,Kundangaiur RR Nagar ,
× RELATED மண்டலம் 4 மற்றும் 8க்கு கோரப்பட்ட...