பொன்பரப்பி கிராமத்தில் 58 வது நூலக வர விழா

ஜெயங்கொண்டம், நவ.29: செந்துறை அருகில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள கிளை நூலகத்தில் 58வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள பொன்பரப்பி கிளை நூலகத்தில் நேற்று முன்தினம் மாலை 58-வது தேசியநூலக வாரவிழா நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். நூலக வாசகர் வட்டத் தலைவர் கோவிந்தசாமி வரவேற்புரையாற்றினார்.

விழாவில் தலைமை ஆசிரியர் இராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் செல்வகணேசன், அறிவழகன், செல்வகுமார், பிரபு, உள்ளிட்ட ஆசிரியர்களும், குகன், ராணுவ வீரர் இராமு, சிவகுமார் உள்பட 37 பேர் கலந்து கொண்டு தலா ரூ.1000 செலுத்தி புரவலர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். புரவலர்களுக்கு மாவட்டநூலக அலுவலர் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். இறுதியாக நூலகர் சுமதி நன்றி கூறினார்.

 

Related Stories: