சேந்தமங்கலம், நவ.29: கொல்லிமலை செம்மேடு பஸ் நிலையம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா குழு செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் 50 ஆண்டுகள் தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை, தொழிலாளர்களுக்கு எதிராக அவர்களை வஞ்சிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள 4 சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும். 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். ஒன்றிய அரசு தொழிலாளர்களை வஞ்சிக்கும் வகையிலான சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- கம்யூனிஸ்ட்
- Senthamangalam
- செம்மேடு
- Kollimalai
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- யூனியன் அரசு
- தாலுகா குழு
- தங்கராஜ்
