திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம்: கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் திருவண்ணாமலை வழியாக வந்து செல்ல தடை!

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளனர். ஆகையால் வெளி மாவட்டங்களில் இருந்து வழக்கமாக திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் (HMV லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள்) மற்றும் இலகுரக வாகனங்கள் (LMV – கார்,வேன் உள்ளிட்ட வாகனங்கள்) 02.12.2025 காலை 08.00 மணி முதல் 05.12.2025 காலை 06.00 மணி வரை திருவண்ணாமலை வழியாக வந்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளதுடன் மாற்றுப்பாதைகளில் செல்வதற்காக கீழ் காணும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் HMV & LMV விழுப்புரம், கடலூர் புதுச்சேரி

1) பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களிலிருந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் மார்க்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான பர்கூர்-வாணியம்பாடி – வேலூர் – ஆற்காடு செய்யாறு – வந்தவாசி வழியாக செல்லவும்.

2) மேற்படி வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

விழுப்புரம், கடலூர், புதுச்சேரி HMV & LMV பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்

1) விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் வழித்தடங்களிலிருந்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெங்களூரு மார்க்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வந்தவாசி – செய்யாறு – ஆற்காடு – வேலூர் – வாணியம்பாடி – பர்கூர் வழியாக செல்லவும்.

2) மேற்படி வாகனங்கள் வேட்டவலம் / செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை. வழியாக செல்ல அனுமதி இல்லை.

திருப்பதி, கே.ஜி.எப், வேலூர் HMV & LMV திண்டிவனம், விழுப்புரம், கடலூர், திருச்சி

1) திருப்பதி, கே.ஜி.எப், வேலூர் உள்ளிட்ட வழித்தடங்களிலிருந்து திண்டிவனம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் திருச்சி மார்க்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வேலூர் ஆற்காடு செய்யாறு -வந்தவாசி வழியாக செல்லவும்.

2) மேற்படி வாகனங்கள் கண்ணமங்கலம், போளூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

திண்டிவனம், விழுப்புரம் கடலூர், திருச்சி HMV & LMV திருப்பதி, கே.ஜி.எப் வேலூர்

1) திண்டிவனம், விழுப்புரம், கடலூர், திருச்சி, புதுச்சேரி, வழித்தடங்களிலிருந்து திருப்பதி, கே.ஜி.எப். வேலூர் மார்க்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வந்தவாசி -செய்யார் ஆற்காடு – வேலூர் வழியாக செல்லவும்.

2) மேற்படி வாகனங்கள் வேட்டவலம் / செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் HMV & LMV விருத்தாசலம், சிதம்பரம், நாகப்பட்டினம்

1) பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களிலிருந்து விருத்தாசலம், சிதம்பரம், நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான தர்மபுரி – தொப்பூர் – சேலம் – வாழப்பாடி – ஆத்தூர் வழியாக செல்லவும்.

2) மேற்படி வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக செல்ல அனுமதி இல்லை.

Related Stories: