×

வாரச்சந்தை ஏலத்தொகையை குறைக்க குழுவிற்கு பரிந்துரை

தாரமங்கலம், நவ.28: தாரமங்கலத்தில், வாரசந்தையில் உள்ள கடைகளின் ஏலத்தொகையை குறைக்க மண்டல குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தாரமங்கலம் வாரசந்தை பிரசித்தி பெற்றது. சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். சந்தையில், பொதுமக்கள் தங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்வழ வழக்கம். இந்த சந்தை நகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. சந்தைக்கு ஏலத்தொகை ரூ.2 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் என இருப்பதால், இதனை கட்டி ஏலம் எடுக்க பொதுமக்கள் முன் வரவில்லை. இதனால் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நகராட்சி நிர்வாகம் சார்பில் வசூல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று வாரசந்தை ஏலம் நடந்தது. ஆணையாளர் சுதர்சன் (பொ) தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் குணசேகரன் முன்னிலையில் ஏலம் தொடங்கியது. இதில் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டு, அரசு நிர்ணயம் செய்த தொகைக்கு குறைவாக ஏலம் கேட்டார். இதனால், ஏல தொகை குறைப்பது குறித்து, நகராட்சி மண்டல குழுவுக்கு பரிந்துரை செய்யபடும். பின்னர், குழு பரிந்துரை படி ஏலம் நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கபட்டது.

Tags : Taramangalam ,
× RELATED சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு