சிறுவாணி அணை நீர் மட்டம் கணிசமாக குறைகிறது

கோவை, நவ.27: கோவை சிறுவாணி அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 49.52 அடி. நேற்று அணையின் நீர் மட்டம் 38.70 அடியாக இருந்தது. அணையில் இருந்து 9.7 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டது. அணையின் நீர் மட்டம் சுமார் 10 அடி குறைந்துள்ளது. நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. பல்வேறு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் அணையின் நீர் தேக்க பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. மழை இல்லாத நிலையில் நீர் மட்டம் உயர வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது அணையின் நீர் மட்டம் படிப்படியாக குறையும் நிலையிருக்கிறது. வரும் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் நீர் இருப்பு இருக்கும்.

அணையில் இருந்து தொடர்ந்து அதிக பட்ச அளவிற்கு குடிநீர் பெறப்படும் என குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: