- கார்த்திகை தீபம்
- திருவண்ணாமலை
- டிஜிபி
- சென்னை
- தமிழ்நாடு டிஜிபி
- திருவண்ணாமலை மாவட்டம்
- பொலிஸ் கண்காணிப்பாளர்
- சென்னை உயர் நீதிமன்றம்
- கார்த்திகை தீபத் திருவிழா
சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவில் 15,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தமிழக டிஜிபியும், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். டிசம்பர் 3ம் தேதி நடைபெற இருக்கும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என்பதால், அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் போதுமான காவல்துறையினரை பணியில் அமர்த்த வேண்டும். வாகனம் நிறுத்துவதற்கு போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மருத்துவ வசதிகள் வழங்க தற்காலிக முகாம்கள் அமைக்க வேண்டும். கிரிவலப்பாதையில் போலி சாமியார்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்க கூடாது. கடைகள் அமைக்க அனுமதிக்க கூடாது. கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, தமிழக அரசு, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியோர் நவம்பர் 24ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார். இந்த நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக டிஜிபியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், திருவண்ணாமலை கார்த்திகை தீபம் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் பக்தர்களின் வசதிக்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உடனடி பாஸ் திட்டம், இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும் கோயிலில் 26 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 7 மருத்துவக் குழுக்களை நியமிக்க, சுகாதார துறையை கேட்டுக் கொண்டுள்ளோம் தமிழக டிஜிபி-யும், தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
