சென்னை : கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூரில் செப்.27ல் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
