×

மரம் விழுந்து மின் கம்பி அறுந்ததில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று மாலை சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் சாலை ஓரத்தில் இருந்த ஒரு புளியமரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது. இதில் சாலையோர இருந்த மின்கம்பிகள் அறுந்து வீட்டின் மீதும், அதன் அருகில் இருந்த ஒரு சிறிய தேவாலயத்தின் மீதும் விழுந்தது.

இதில் மின் கம்பியில் சிக்கி வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சாத்தமங்கலம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த மரியசூசை (70), இவரது மனைவி பெலோஸ்மேரி (60), உறவினரான வனதாஸ்மேரி (70) ஆகிய 3 பேரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அருகில் இருந்த கனகராஜ்(45) என்பவர் காயமடைந்து சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags : Sethiyathopu ,Chidambaram ,Bhuvanagiri ,Cuddalore district ,Sathamangalam ,
× RELATED நகர் முழுவதும் ஒலிக்கும் அரோகரா கோஷம்;...