உடன்குடி அருகே தரமற்ற தார் சாலை அமைத்ததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

உடன்குடி,ஜன.7: உடன்குடி அருகே தரமற்ற தார்சாலை அமைக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடன்குடியிலிருந்து கொட்டங்காடு வழியாக படுக்கப்பத்து செல்லும் சாலையில் கந்தபுரம் முதல் உதிரமாடன்குடியிருப்பு வரையுள்ள சாலையை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. தரமற்ற பொருட்களை கொண்டு சாலைப்பணி நடைபெறுவதாக கூறி சமக மாவட்ட செயலாளர் தயாளன் தலைமையில் ஒன்றிய தேமுதிக செயலாளர் தங்கவேல்துரை, கந்தபுரம் அதிமுக செயலாளர் ராஜவேல், கந்தபுரம் திமுக செயலாளர் சுடலைமணி மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

 இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால் 6 பிரிவு ரோடுகளில் 6வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும், தரமான பொருட்களை கொண்டு சாலை அமைக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அதிகாரிகள் 6இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுத்ததுடன், தொடர்ந்து தரமான வகையில் சாலை அமைக்கும் பணி நடந்தது. இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: