×

பேராவூரணி, சீர்காழி, ஜெயங்கொண்டம் தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேராவூரணி, சீர்காழி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், அறிவுரைகளை வழங்கினார்.

தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதமே உள்ளதால் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் நிர்வாகிகளை அவர் வலியுறுத்தி வருகிறார். மேலும் நிர்வாகிகளிடம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்(எஸ்ஐஆர்) செயல்பாடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். அப்போது நிர்வாகிகள், பல இடங்களில் கணக்கீட்டுப்படிவங்களை பதிவேற்றும் போது சர்வர் மெதுவாக இருப்பதாக புகார் அளித்தனர்.

Tags : Chief Minister ,Peravoorani ,Sirkazhi ,Jayankondam ,Chennai ,M.K. Stalin ,Anna ,Arivalayam ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி...