பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு

புதுக்கோட்டை, ஜன.7: பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் திரளாக பெற்றோர்கள் பங்கேற்றனர். கொரோனா நோய் தொற்று தற்காப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பள்ளிகளை திறந்து கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை தொடங்கலாமா என்று மாநிலம் முழுவதும் கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்துவதற்கு கல்வித்துறை அமைச்சர் ஆணை பிறப்பித்தார். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை நகரத்தில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் கலந்து கொண்டு கருத்துகளைத் கேட்றார். இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் புதுக்கோட்டை பள்ளி துணை ஆய்வாளர் குரு மாரிமுத்து கலந்து கொண்டனர்.

Related Stories: