×

தூய்மைப் பணியில் ஈடுபட்ட பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி

 

வேளச்சேரி: பணியில் ஈடுபட்டிருந்த பெண் தூய்மைப் பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை சர சரமாரியாக தாக்கியபோது தப்பியோடிவிட்டார். சென்னை மாநகராட்சி அடையார் மண்டல தூய்மை பணியாளர்கள் இன்று காலை அடையார் மேம்பாலத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குவந்த ஒரு வாலிபர் திடீரென பெண் தூய்மைப் பணியாளர் ஒருவரிடம் பாலியல் சீன்டலில் ஈடுபட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் கூச்சல் போட்டதால் சக தொழிலாளர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை சுற்றிவளைத்து தாக்கியபோது தப்பியோடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்படி, சாஸ்திரி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமராவில் கிடைத்த காட்சியின் அடிப்படையில், பெண்ணிடம் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags : Chennai Corporation ,Adyar Zone ,Adyar ,
× RELATED பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை...