வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

போடி, ஜன. 4: போடியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், போடி முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், நகரச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது நகரச் செயலாளர் உட்பட பழனிராஜ் உட்பட பலரும் உடன் சென்றனர்.

மாவட்ட பாஜ சார்பில் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர். மாவட்ட ஓபிசி அணித்தலைவர் மோகன்தாஸ், மாவட்ட ஓபிசி பொதுச்செயலாளர் பரமசிவம் உட்பட பலர் உடனிருந்தனர். ஆண்டிபட்டி பஸ்நிலையம் அருகே, மாலைக்கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் மாலை அணிவித்து, பூக்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

அவர் பேசுகையில், ‘மாலைக்கோயில் வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜாராம், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராமசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அமமுக சார்பில் மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262வது பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டியில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில், அவரது திருவுருவ படத்திற்கு தேனி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் பாலச்சந்திரன், வடக்கு ஒன்றியச் செயலாளர் தவச்செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், இணைச்செயலாளர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: