கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு தடை: சுற்றுச்சூழல் துறை உத்தரவு

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் துறை தடை விதிததுள்ளது. சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளான சோழிங்கநல்லுார், பெருங்குடி மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டது.  இதற்காக, ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுடன் 340 கி.மீ., துாரத்துக்கு ₹1,243 கோடி  மதிப்பில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுகிறது.  இதில், கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரை 52 கி.மீ., துாரத்திற்கு ₹376 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   எனவே, இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை மாநகராட்சி செயல்படுத்தும் மழைநீர் திட்டத்தில் விதிமீறல் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளை தொடர அனுமதிக்க கூடாது  என, தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில்  தமிழக சுற்றுச்சூல் மற்றும் கடலோர ஒழங்குமுறை ஆணையம், சோழிங்கநல்லுார், உத்தண்டி, பாலவாக்கம் பகுதியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிக்கு தடை விதித்துள்ளது. அதில், பசுமை தீர்ப்பாயத்தில்  வழக்கு விசாரணையில் இருப்பதால், மறு உத்தரவு வரும் வரை தடை தொடரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: