சென்னை: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் 5,043 பேருக்கு நல உதவி வழங்கப்பட்டது. திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், 5000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள், 43 மாணவர்களுக்கு தலா ₹5000 கல்வி உதவிதொகை என 5,043 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பள்ளி அருகில் நடைபெற்றது. மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா தலைமை வகித்தார். பகுதி செயலாளர் கே.கண்ணன், மு.இராசா மற்றும் உ.துரைராஜ், எஸ்.டி.தங்கராஜன், வாசுகி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ பங்கேற்று 5,043 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.