கான்டிராக்ட் தொகையை பெற முடியாமல் தவிக்கும் சிறு ஒப்பந்ததாரர்கள்: மாநகராட்சி ஆணையர் தலையிட கோரிக்கை

சென்னை: பணி ஒப்பந்தம் தொடர்பான 1500க்கு மேற்பட்ட கோப்புகள் நிலுவையில் உள்ளதால் மண்டலங்களில் செய்து முடித்த பணிக்கு பணம் பெற முடியாமல் மாநகராட்சி சிறு ஒப்பந்தாரர்கள் தவித்து வருகின்றனர். இது சென்னை மாநகராட்சி சிறு ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது :

சென்னை மாநகராட்சி மண்டல அளவில் பல்வேறு பணிகளை சிறு ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர். இவ்வாறு பணிகளை செய்பவர்கள் பணிக்கான ஆணை பெற்ற மாநகராட்சிக்கும் ஒப்பந்தாரருக்கும் இடையில் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால்தான் முறையான அதற்கான தொகையை விடுவிக்க முடியும்.

ஆனால் கடந்த ஜனவரி மாதம் முதல் நாங்கள் செய்த பணிக்கான ஒப்பந்தங்களை இது வரை போடப்படவில்லை. நாங்கள் செய்து முடித்த பணிகளுக்கு ஒப்பந்தங்கள் போடுவது தொடர்பான 1200க்கு மேற்பட்ட கோப்புகள் ஒப்பந்தங்கள் போடாமல் கிடப்பில் உள்ளது. மேலும் தற்போது செய்து வரும் 1200 பணிகளுக்கு ஒப்பந்தங்கள் போடுவது தொடர்பான கோப்புகளும் கிடப்பில் உள்ளது. இதனால் 500க்கு மேற்பட்ட சிறு ஒப்பந்ததாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்களுக்கு அளிக்க வேண்டிய கோடிக் கணக்கான ரூபாயை மாநகராட்சி அளிக்கவில்லை. இதனால் கடன் வாங்கி பணிகளை செய்த பல சிறு ஒப்பந்ததாரர்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சென்னை மாநகராட்சி ஆணையர் இதில் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுத்து தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: